54 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஏமாற்றி 28 இலட்சம் ரூபா கொள்ளை

Report Print Vethu Vethu in சமூகம்
635Shares

54 வயதுடைய பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து 28 இலட்சம் ரூபாய் கொள்ளையடித்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரதேசத்தில் வைத்து 28 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தான் திருமணம் செய்யாதவர் என கூறிய நபர் 54 வயதான பெண்ணை திருமணம் செய்துக்கொள்வதற்கு விருப்பம் தெரவித்துள்ளார்.

புத்தல பிரதேசத்தை சேர்ந்த குறித்த பெண் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது காணி ஒன்றை ஒரு கோடியே 34 லட்சம் ரூபாய்க்கு விற்பனை விற்பனை செய்து அந்த பணத்தை மொனராகலை பிரதேச வங்கி கிளையில் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் வைப்பு செய்துள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் அவரை திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்த இளைஞன் வங்கி கடன் அட்டை பெறுவதற்கு அழைத்து சென்றுள்ளார். இதன் போது கடன் அட்டை தன்னிடம் வைத்துக் கொண்ட இளைஞன் பெண்ணுக்கு வேறு கடன் அட்டையை வழங்கியுள்ளார்.

அதன் பின்னர் 48 முறை பதுளை மற்றும் சுற்றியுள்ள பிரதேசங்களில் உள்ள ATM இயந்திரங்களில் 28 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

தனது கணக்கில் பணம் குறைவது தொடர்பில் இந்த பெண் பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ள்ளார்.

முறைப்பாட்டிற்கமைய மேற்கொண்ட விசாரணையில் இந்த இளைஞர் 28 லட்சம் ரூபாய் பணத்தில் பேருந்து ஒன்று கொள்வனவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


you may like this video