நாட்டின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
நாட்டுக்கு எந்தவொரு தரப்பில் இருந்து அச்சுறுத்தல் ஏற்படதவகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு சபையை கூட்டி நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றது.
இதேவேளை நாட்டில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை போன்று மற்றும் ஒரு தாக்குதல் நடத்தப்படுவதற்கான அச்சம் உள்ளதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னால் அண்மையில் சாட்சியமளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழு தகவல்களை மறைப்பதற்காக அமைக்கப்பட்ட குழு என்றும் அது அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்