அம்பாறை பகுதியினை ஆக்கிரமித்துள்ள யானை கூட்டம்!

Report Print Varunan in சமூகம்

அம்பாறை - சடயந்தலா பகுதியினை யானை கூட்டமொன்று ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அம்பாறை மாவட்டத்தின் உகணை பகுதியை ஊடறுத்து செல்லும் சடயந்தலாவை பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயல் நிலங்களை நோக்கி சுமார் 23 யானைகள் வருகை தந்துள்ளன.

கடந்த சனிக்கிழமை அப்பகுதிக்கு வந்த யானை கூட்டத்தின் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அவ்விடத்தில் அதிகளவாக குவிந்துள்ளனர்.

மேலும் இப்பிரதேசத்தில் தினந்தோறும் வயல் வெளிகளில் வைக்கோல்களுக்கு தீ வைப்பதன் காரணமாக காட்டில் உள்ள யானைகள் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.