அரசாங்க ஊழியர்களுக்காக அறிமுகமாகும் புதிய நடைமுறை!

Report Print Vethu Vethu in சமூகம்
1250Shares

அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கடித ஆவணங்கள் தொடர்பான அனைத்து தகவல்களும் இணையத்தில் சேர்ப்பதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச முகாமைத்துவ அமைச்சுக்கு கிடைக்கும் ஆவணங்களில் ஓய்வூதியம் பெறுவதற்காக சமர்ப்பக்கப்படும் ஆவணங்களே அதிகமாக உள்ளதென அவர் கூறியுள்ளார்.

சில தனிப்பட்ட ஆவணங்களில் உள்ள குறைப்பாடுகள் காரணமாக அதனை தயாரிப்பதற்கு தாமதம் அடைவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆவணங்களுக்கு சேதம் ஏற்படாத வகையில் வைத்துக் கொள்வதற்காகவும் அதிக இடம் தேவைப்படுவதனாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் தகவல்களை இணையத்தில் சேர்ப்பதற்காக அமைச்சிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.