தொழில்கோரும் ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு அரச நிறுவனங்களில் தொழில்களை பெற்றுக்கொடுக்கும் நேர்முக தேர்வுகளின்போது இராணுவ அதிகாரிகளும் நேர்முக தேர்வுக்குழுவில் இருப்பது குறித்து அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கில் இந்த நடைமுறை இருந்ததாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெறும் இந்த நேர்முகத்தேர்வின்போது இராணுவ அதிகாரிகளும் விண்ணப்பதாரிகள் தொடர்பில் வேறு ஒரு ஆவணக்கோப்பை தயாரித்து வைத்துள்ளனர்.
இது தொடர்பில் கேட்டபோது இந்த நியமனங்கள் வறுமையானவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் வழங்கப்படுவதன் காரணமாக குறித்த விண்ணப்பத்தாரிகளின் உண்மையான நிலவரம் என்ன என்பதை கண்காணிப்பதற்காகவே தாம் தனியாக ஆவணக்கோவையை தயாரித்துள்ளதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
விண்ணப்பதாரி உண்மையாக வறுமையில் வாழும் குடும்பத்தைச் சேர்ந்தவரா? என்பதை அறிந்துக்கொள்ளவதற்காக படையினர் குறித்த ஆவணக்கோவையைக்கொண்டு விண்ணப்பத்தாரிகளின் வீடுகளுக்கு சென்று கண்காணிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.