கல்வி அமைச்சின் முன்னால் போராட்டம் நடத்திய இரு பௌத்த பிக்கு மாணவர்கள் உட்பட பலர் கைது!

Report Print Ajith Ajith in சமூகம்
68Shares

கல்வி அமைச்சின் முன்னால் போராட்டம் நடத்திய 2 பிக்குமாணவர் உட்பட்ட 21 மாணவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிமன்ற கட்டளையை மீறிய குற்றச்சாட்டின் பேரிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நாளைய தினம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை றுகுனு பல்கலைக்கழக மாணவர்கள் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர் என்ற குற்றச்சாட்டை சுமத்தி கடந்த 27ம் திகதி அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சத்தியாகிரக போராட்டத்தை நடத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.