எந்தவொரு நாடும் வெளியேற முடியாது! இலங்கைக்கு ஆப்பு வைத்த ஐ.நா

Report Print Ajith Ajith in சமூகம்
6672Shares

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட யோசனையில் இருந்து எந்தவொரு நாடும் வெளியேறமுடியாது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப்பேரவை இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட நல்லிணக்கம் தொடர்பான யோசனையின் இணை அனுசரணையில் இருந்து விலகுவதாக இலங்கை கடந்த வாரம் அறிவித்தது.

இதனை இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஜெனீவாவிலும் சென்று அறிவித்துவிட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் ஒழுங்குவிதிகளின்படி நிறைவேற்றப்பட்ட யோசனை ஒன்றில் இருந்து நாடு ஒன்று வெளியேறதுடியாது என்று ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகரக பேச்சாளர் ரொனால்டோ கோமிஸ் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்றப்பட்ட யோசனை ஒன்றில் இணை அனுசரணையாளராக சேர்ந்துக்கொள்வதற்கு நாடுகளுக்கு வாய்ப்பிருப்பதாக கோமிஸ் தெரிவித்துள்ளார்.

எனினும் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்லட்டை தவிர வேறு எந்த உயரதிகாரிகளும் இலங்கையின் நிலைப்பாடு தொடர்பில் கருத்துக்களையோ முடிவுகளையோ வெளியிடவில்லை.