தென் கொரியாவில் இருந்து வருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Steephen Steephen in சமூகம்
313Shares

தென் கொரியாவில் இருந்து இலங்கைக்கு வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இன்று அதிகாலை 3.56 அளவில் தென் கொரியாவின் இன்சியோன் நகரில் இருந்து வந்த கொரியன் எயார் விமானத்தில் 182 பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

இவர்களில் 137 பேர் இலங்கையர்கள். கடந்த சில நாட்களாக தென் கொரியாவில் இருந்து வரும் விமான பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கட்டுநாயக்க வந்த பயணிகளில், உடல் உஷ்ணத்தில் மாற்றம் உள்ளவர்கள், காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் விமான நிலைய சுகாதார பிரிவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் விசேட அம்பியூலன்ஸ் மூலம் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரும் சகல பயணிகளும் விமான நிலையத்தின் சுகாதார பிரிவில் பொருத்தப்பட்டுள்ள தானியங்கி உபகரணம் மூலம் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

தென் கொரியாவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.