வவுனியா மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட அமைப்புக்களுக்கு மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான காதர் மஸ்தானால் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வவுனியா செயலகத்தில் இன்றைய தினம் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்தானின் கடந்த வருடம் பன்முகப்படுத்தப்பட்ட நிதித்திட்டத்தின் கீழ் சுமார் 2.59 மில்லியன் ரூபா நிதியிலிருந்து 7,40,000 ரூபா பெறுமதியான உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர் தர்மபால, வவுனியா மாவட்ட மேலதிக செயலாளர் ரி.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கமலதாசன் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.