இரணைமடுவில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சி இரணைமடு பகுதியில் ஐந்து இலட்சம் பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் மற்றும் ஜிபிஎஸ் கரு என்பவற்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் இன்று மாலை ஐந்து முப்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது.

முறிகண்டியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மகேந்திரா ரக வாகனத்தை சந்தேகத்தின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினரும், இராணுவப்புலனாய்வு பிரிவினரும் இணைந்து சோதனை செய்த போது ஐந்து இலட்சத்திற்கு அதிக பெறுமதியான ஐம்பது கிராம் ஐஸ் போதைப் பொருளும் ஜிபிஎஸ் கருவி கைப்பற்றப்பட்டதோடு, சந்தேக நபரான வாகன சாரதியும் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலிற்கு அமைவாக விசேட அதிரடிப் பிரிவினருரும் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது இவை மீட்கப்பட்டதுடன், வாகனம் மற்றும் சாரதி கைது செய்யப்பட்டனர். கைதான வாகனமும் மற்றும் சாரதியும் கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.