யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.
பூநகரி வீதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த 26 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
மோட்டார்சைக்கிளொன்றும், கெப்ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவருகிறது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகள் சாவகச்சேரி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.