நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசேட சோதனை மேற்கொள்ள தீர்மானம்

Report Print Sujitha Sri in சமூகம்
344Shares

நாளை முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இத்தாலியிலிருந்து இலங்கை வரும் பயணிகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

இத்தாலி மற்றும் தென்கொரியாவில் உயிர் கொல்லி கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் இத்தாலி, தென்கொரியாவிலிருந்து இலங்கையர்கள் நாடு திரும்புவது அதிகரித்துள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த விசேட சோதனை நடவடிக்கையை மேற்கொள்வதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தொற்று நோய்கள் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

அதேவேளை அவர்களை தொடர்ந்து 14 நாட்களுக்கு அவதானத்திற்கு உட்படுத்துவதற்கு அவசியமாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், காய்ச்சல் அறிகுறிகளுடன் இன்று 6 வைத்தியசாலைகளில் 16 பேர் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தொற்று நோய்கள் தடுப்பு பிரிவின் தொற்றுநோய் விசேட வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி ஐ.டி.எச் எனப்படும் தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தில் 5 பேரும், நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் வெளிநாட்டவர் ஒருவர் உட்பட இருவர் சிகிச்சை பெற்று வருவதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.