1118 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள பெண் ஒருவர் உட்பட்ட ஐந்து பேரையும் தடுத்து வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவர்கள் நேற்று காலி கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் இருந்து 74 கிலோகிராம் ஹெரோய்ன், 65 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டன.
இவர்கள் திக்வெல, பெலியத்த, பிலியந்தல தங்காலை மற்றும் குடாவெல பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.
இவர்கள் மீது போதைப்பொருட்களை இறக்குமதி செய்தமை மற்றும் விநியோகத்தமை ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.