நான்கு பிள்ளைகளுடன் வயோதிப தாயில் தங்கி வாழும் கணவனை இழந்து வாழும் பெண்

Report Print Banu in சமூகம்

உள்நாட்டு போர் நிறைவுற்று பத்து வருடங்கள் கடந்திருந்தாலும் அது ஏற்படுத்திய வடு எத்தனை காலம் ஆனாலும் மாறாது.

இதற்கு சாட்சியாய் இன்றும் அந்த கொடிய போரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்த பலர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இறுதி யுத்தத்தின்போது பல கொடூரங்களையும், துயரங்களையும் தாங்கி நின்ற இடமே புதுக்குடியிருப்பு பகுதி.

இங்கு வாழும் மக்கள் வாழ்வாதாரம், அடிப்படை வசதிகளற்ற நிலையில் இருப்பதுடன், தம் வாழ்நாளை பல துயரங்களுடன் கழித்து வருகின்றனர்.

அதிலும் ஆண் தலைமைத்துவம் இன்றிய குடும்பங்கள் இன்றும் பல ஆறாவடுக்களுடன் துயரத்தின் மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

அவர்கள் அன்றாட வாழ்வில் எதிர்நோக்கும் துயரங்களை எமது ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சி வெளிக் கொணர்ந்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகின்றது.

அந்த வகையில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு - சூட்டி வீதியினைச் சேர்ந்த சந்திரமோகன் சாந்தி தமது இன்னல்களை உறவுப்பாலம் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

தமது இயலாத நிலையிலும் அவரது வயோதிப தாயார் நாளாந்தம் கூலி வேலை செய்து கணவனை இழந்து வாழும் உடல் உபாதைகளுக்கு உள்ளான மகளான சந்திரமோகன் சாந்தியையும், நான்கு பேரப்பிள்ளைகளையும் பராமரித்து வருகின்றார்.

சந்திரமோகன் சாந்தி உடல் உபாதைகளுக்கு உள்ளாகி சத்திரசிகிச்சை மேற்கொண்டமையால் எவ்விதமான வேலையையும் செய்ய முடியாத நிலையில் உள்ளார்.

மிகவும் துயரத்தின் மத்தியில் தமது அன்றாட வாழ்வை கழித்து வரும் இவர்களது வாழ்வில் நல் உள்ளங்கள் நினைத்தால் ஒளியேற்ற முடியும்.

அந்த வகையில் நீங்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து செய்யும் உதவி அவர்களது வாழ்க்கையில் சிறந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தும்.

அவர்கள் தம் துயரங்களை பகிர்ந்து கொண்டுள்ள காணொளி உங்கள் பார்வைக்காக,

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600