கொழும்பு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

Report Print Sujitha Sri in சமூகம்

கொழும்பு மாநகரசபையின் மத்திய உணவு பிரிவு, மக்களுக்கு அறிவுறுத்தலொன்றை வழங்கியுள்ளது.

அந்த வகையில் கொழும்பு நகரின் சிற்றுண்டிசாலைகளில் வழங்கப்படும் தேநீரில் சுவை தொடர்பில் பிரச்சினை இருக்குமாயின் அறிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

சில சிற்றுண்டிச்சாலைகளில் வழங்கப்படும் தேநீரை தயாரிப்பதற்காக, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற தேயிலை பயன்படுத்தப்படுவதாக பல முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையிலேயே குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 0112 676161 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்க முடியும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.