ரயிலில் சிக்கிய பெண்ணின் பயண பொதியில் பல மில்லியன் ரூபா பெறுமதியான பணம்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் 6வது மேடையில் ரயில் வரும் வரை காத்திருந்த பெண்ணொருவர் ரயில் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை நடந்துள்ளது.

தலைமன்னார் பிரதேசத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியையான அந்த பெண்ணின் கைப்பையில், 39 லட்சத்து 8 ஆயிரத்து 329 ரூபாய் பணம், நான்கு தங்கச் சங்கிலிகள், வலயல் மற்றும் கடிகாரம் என்பன இருந்ததாக அந்த பெண் மோதுண்ட ரயில் பிரதான கட்டுப்பாட்டாளர் எச்.பீ. சோமரத்ன தெரிவித்துள்ளார்.

இதனை தவிர தேசிய அடையாள அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், கடவுச்சீட்டு என்பனவும் இருந்ததாகவும் அவற்றை பாதுகாப்பாக கோட்டை ரயில் நிலையத்தின் பொறுப்பதிகாரியிடம் கையளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்த ரயில் பயணிகள் இறங்கிய பின்னர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் புறப்பட்டுள்ளது. அப்போது 6வது மேடையில் ரயில் பாதைக்கு அருகில் இருந்த பெண் ரயிலில் மோதுண்டு ரயில் பாதையில் விழுந்துள்ளார். இதனையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டு, 1990 தொலைபேசி இலக்கத்தை தொடர்புக்கொண்டு அம்பியூலன்ஸ் வண்டியை வரவழைத்து பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் சோமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ரயிலில் மோதுண்ட அந்த பெண்ணின் இரண்டு கால்கள் துண்டாகி உள்ளது.