மலையென உயருகிறது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

கொரோனாவைரஸ் தொற்று காரணமாக சீனாவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3000ஐயும் தாண்டியுள்ளது.

இன்று வெளியிட்ட தகவலில் இந்த எண்ணிக்கை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தொற்று காரணமாக சீனாவில் மனித உயிர்ப்பலிகளும் பொருளாதார தாக்கங்களும் ஏற்பட்டுள்ளன.

உத்தியோகபூர்வ தகவலின்படி கொரோனாவைரஸ் காரணமாக 3012 பேர் உயிரிழந்தனர். 80ஆயிரத்து 409பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தென்கொரியாவில் 6000 பேர் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 40பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 3000 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.100 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

ஈரானில் 92 பேர் உயிரிழந்தனர். 2922 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகொரியாவும் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளது எனினும் அங்குள்ள தகவல்கள் வெளியாகவில்லை என்று வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 150பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.