கிளிநொச்சியில் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரின் தடையை மீறி செயற்பட்ட அரசியல்வாதிகள்

Report Print Yathu in சமூகம்
90Shares

கிளிநொச்சி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட இடங்களில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகள் தொடர்பில் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் ஏ-35 வீதியின் உள்ள பாடசாலை மதில்கள், அரச திணைக்கள மதில்கள், விளம்பரம் ஒட்டுவதற்கு தடை விதிக்கப்பட்ட இடங்களில் நேற்றிரவு தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு அவை சேதமாக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாடசாலை மதில்கள் உள்ளிட்ட தடை விதிக்கப்பட்ட இடங்களில் தேர்தல் பிரச்சார விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளமை குறித்து பாடசாலை சமுகத்தினர் மற்றும் பல்வேறு தரப்பினரும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் சுவரொட்டிகள் மற்றும் பதாதைகளை காட்சிப்படுத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.