மட்டக்களப்பில் நகரங்களை அழகுபடுத்தும் வேலைதிட்டத்தில் சுவர் ஓவியங்கள் திறந்துவைப்பு

Report Print Kumar in சமூகம்
119Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனையில் முன்னெடுக்கப்பட்ட நகரங்களை அழகுபடுத்தும் சுவர் ஓவிய வேலைத்திட்டம் மட்டக்களப்பில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நகரங்களை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தில் மட்டக்களப்பு - பிள்ளையாரடி பிரதேசத்தில் வரையப்பட்டிருந்த முதலாவது ஓவியம் இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் எண்ணக்கருவில் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று பிரதேசங்களில் சுவர் ஓவியம் வரையும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

மட்டக்களப்பு நகரிலுள்ள பொலிஸ் விடுதி மதில்களில் வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சுவர்களிலும் மட்டக்களப்பு நகரின் புற நகர்ப்பகுதியான பிள்ளையாரடி பிரதேசத்தில் அமைந்துள்ள வீதி அபிவிருத்தி அதிகார சபையின் சுற்று மதிலிலும் இந்த ஓவியங்கள் வரையும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.

இவ் ஓவியங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சரித்திர பிரசித்திபெற்ற இடங்கள் மற்றும் அவை அமைக்கப்பட்ட காலத்தினை சித்தரிக்கின்ற வகையில் வரையப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் நிறைவேற்று பொறியியலாளர் ஏ.சசிநந்தன்,வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் கே.சிவநாதன், வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகஸ்தர்கள், ஊழியர்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.