காத்தான்குடியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட ஐவர் கைது

Report Print Mubarak in சமூகம்

காத்தான்குடியில் பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புபட்ட ஐவர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் காத்தான்குடி பொலிஸார் நேற்று நடத்திய திடீர் சுற்றிவளைப்பின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது கஞ்சா போதைப்பொருளுடன் இருவரும், ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டுவந்த இருவருமாக மொத்தம் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளர்.

கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபர்களிடமிருந்து 850 மில்லிகிராம் கஞ்சாவும், 20 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள ஐவருக்கு எதிராகவும் வழக்கு பதிவு செய்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.