காலி கடற்பரப்புக்கு அப்பால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் கரைக்கு எடுத்து வரப்பட்டன

Report Print Ajith Ajith in சமூகம்

கடந்த திங்கட்கிழமை காலி கடற்பரப்புக்கு அப்பால் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 6 பில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்ன் உட்பட்ட போதைப்பொருட்கள் இன்று கரைக்கு எடுத்து வரப்பட்டன.

இந்தப்போதைப்பொருட்களில் 330 ஹெரொய்ன் மற்றும் 50 கிலோ ஐஸ் போதைப்பொருள் என்பன அடங்கியிருந்தன.

நான்கு கப்பல்களில் கொண்டு வரப்பட்ட இந்த போதைப்பொருட்கள் தொடர்பில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த போதைப்பொருட்களை கைப்பற்றிய இரண்டு கப்பல்களும் அமெரிக்க அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டவையாகும்.

இந்தநிலையில் தமது கப்பல்களின் மூலம் இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டமை தொடர்பில் அமெரிக்காவும் நேற்று இலங்கை கடற்படையினருக்கு பாராட்டை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.