மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம் நிறைவு

Report Print Ashik in சமூகம்

மன்னார் சதொச மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கின் எழுத்து மூல சமர்ப்பணம் இன்றைய தினம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்னார் நீதவான் நீதிமன்ற பதிவாளர் ஊடாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 25 திகதி மன்னார் மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், குறித்த வழக்கு தொடர்பான எழுத்து மூல சமர்ப்பணத்தை இம்மாதம் 5 ம் திகதிக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பாக வாதிடும் சட்டத்தரணிகள் முன்வைக்க நீதவான் உத்தரவிட்டிருந்த நிலையில் எழுத்து மூல சமர்ப்பணம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த எழுத்து மூல சமர்ப்பணத்தின் பின்னர் வருகின்ற 10 ஆம் திகதி குறித்த மன்னார் சதோச மனித புதை குழி வழக்கில் காணமல் ஆக்கப்பட்டோர் சார்பாக சட்டத்தரணிகள் வாதிட முடியுமா, இல்லையா என்பது தொடர்பான தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.