முல்லைத்தீவு கரையோர பாடசாலைகளில் சுனாமி போலி ஒத்திகை பயிற்சி முன்னெடுப்பு!

Report Print Vanniyan in சமூகம்

முல்லைத்தீவு கரையோர பகுதி பாடசாலைகளில் இன்றைய தினம் சுனாமி போலி ஒத்திகை பயிற்சி முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவ பிரிவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுனாமி அனர்த்தமொன்று ஏற்படும் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் பாடசாலை மாணவர்களை தெளிவூட்டும் வகையில் இந்த ஒத்திகை பயிற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் , இலங்கை செஞ்சிலுவை சங்கம் , இராணுவம் ,கடற்படை ,விமானப்படை பொலிஸார் இணைந்து இந்த பயிற்சி ஒத்திகையை முன்னெடுத்துள்ளனர் .

இந்த ஒத்திகை நிகழ்வில் முல்லைத்தீவு மேலதிக அரசாங்க அதிபர் கனகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.