அரச நியமனம் இடை நிறுத்தம் செய்யப்பட்ட பட்டதாரிகளுடன் அவசர கலந்துரையாடல்

Report Print Theesan in சமூகம்
190Shares

அரச நியமனம் இடை நிறுத்தம் செய்யப்பட்ட மற்றும் நியமனம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுடன் அவசரக் கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தினால் அரச நியமனம் கிடைக்கப்பெற்று இடை நிறுத்தம் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் அரச நியமனம் கிடைக்கப்பெறாத பட்டதாரிகளுக்கான கலந்துரையாடல் எதிர்வரும் 09.03.2020 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் சங்க கேட்போர் கூடத்தில் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் மோகனதாஸ் தலைமையில் இடம்பெறவுள்ளது.

வடமாகாண பட்டதாரிகளின் அரச நியமனங்களில் ஏற்பட்டுள்ள தடங்கல்கள், பிரச்சினைகளுக்கு உடனடித்தீர்வு பெற்றுக்கொள்ளும் நோக்கில் அண்மையில் அரச நியமனம் கிடைக்கப்பெற்று இடை நிறுத்தம் செய்யப்பட்ட பட்டதாரிகள் மற்றும் நியமனக் கடிதங்கள் கிடைக்கப்பெறாத பட்டதாரிகள் அனைவரும் உரிய ஆவணங்களுடன் தவறாது கலந்துகொள்ளுமாறு வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் ம.ஆனந்தராஜா தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள வடமாகாண பட்டதாரிகள் மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின் தலைவர் 0777425286, செயலாளர் 0773301064, பொருளாளர் 0770763688 ஆகிய இலங்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.