ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் விபத்து! சம்பவ இடத்திலேயே இளைஞர் பலி

Report Print Gokulan Gokulan in சமூகம்

கினிகத்தேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ரஞ்சிராவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளை செலுத்திய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில் ரஞ்சிராவ பகுதியை சேர்ந்த 19 வயதுடைய அனுசதில்ஷான் என்ற இளைஞனே உயிரிழந்துளார்.

டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாளை அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையினை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சடலம் கினிகத்தேனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.