வெளிநாடு செல்ல ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்!

Report Print Vethu Vethu in சமூகம்

வெளிநாட்டு செல்ல ஆசைப்பட்டு 8 இலட்சம் ரூபாய் பணத்தை இழந்த பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

விரவில பிரதேசத்தில் வெளிநாட்டு தொழில் பெற்று தருவதாக கூறி குறித்த பெண்ணிடம் 8 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணம் கொள்ளையடித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்காலை குற்ற விசாரணை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 49 வயதுடைய திஸ்ஸமஹாராம, காவன்திஸ்ஸபுர பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கு முன்னர் குறித்த நபர் மீது 2 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.