கோர விபத்தில் தாய் - மகள் பலி

Report Print Vethu Vethu in சமூகம்

நாத்தன்டிய - துன்கன்னாவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் தாயும், மகளும் உயிரிழந்துள்ளதாக மாரவில பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள் மற்றும் சிறpய ரக லொரி ஒன்று மோதியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் மீகஹக்கிவுல - வெலிபென்னகஹமுல பிரதேசத்தை ரவலங்கே சந்திரிக்கா சேனாரத்ன மெனிக்கே என்ற 54 வயதுடைய தாயும், அஹினசா துலாஞ்சலி என்ற 21 வயதுடைய யுவதியுமே உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த யுவதி பிபிலாதெனிய மத்திய மஹா வித்தியாலயத்தில் சங்கீத ஆசிரியராக சேவை செய்து வந்தவர் என குறிப்பிடப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளை அவரே ஓட்டியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மாரவில பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.