முதலீடுகளை திரும்ப பெறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

Report Print Steephen Steephen in சமூகம்

2020 பெப்ரவரி 26 முதல் மார்ச் 4 ஆம் திகதி வரையான காலத்தில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இலங்கை அரச காப்பீட்டு பத்திரங்களில் முதலீடு செய்திருந்த 8.24 பில்லியன் ரூபாயை திரும்ப பெற்றுள்ளனர்.

அரச காப்பீட்டு பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெப்ரவரி 26 ஆம் திகதி வரை 91.24 பில்லியன் ரூபாய் முதலீடுகள் இருந்தன. அது மார்ச் 4 ஆம் திகதி 83.00 பில்லியனாக குறைந்துள்ளது.

இதற்கு முன்பு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் 11.42 பில்லியன் ரூபாய் முதலீட்டை திரும்ப பெற்றனர்.

இதனடிப்படையில், இரண்டு வாரங்களில் அரச காப்பீட்டு பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் முதலீடு 19.66 பில்லியன் ரூபாயாக குறைந்துள்ளது.