யாழ்ப்பாணத்தில் கிளிநொச்சி இளைஞரொருவர் வசமாக சிக்கினார்

Report Print Sumi in சமூகம்

யாழ்ப்பாணத்தின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் கிளிநொச்சி இளைஞர் பொலிஸாரிடம் வசமாக சிக்கியுள்ளார்.

தொலைபேசி திருட்டு மற்றும் வீதிகளில் நகை பறிப்பு போன்ற சம்பவங்களுடன் தொடர்புபட்டு நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த நிலையில் சந்தேகநபர் இன்றைய தினம் யாழ். பொம்மை வெளிப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயதுடைய பொக்கற் ராஜா எனப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

திருடப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 தொலைபேசிகள் மற்றும் தங்கச்சங்கிலி என்பன சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட நபரை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.