வவுனியாவில் விசேட அதிரடி படையினரால் வெடிபொருள் மீட்பு

Report Print Theesan in சமூகம்

வவுனியா - மரக்காரம்பளை பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்ட செல்லொன்று விசேட அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மரக்காரம்பளை வீதிக்கு அண்மித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இன்று காலை ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்ததுடன் அந்த இடத்தில் பாதுகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை இன்று பிற்பகல் 3 மணியளவில் அப்பகுக்கு சென்ற மடுகந்தை விசேட அதிரடி படையினர் செல்லை அவ்விடத்திலிருந்து அகற்றி செயலிழக்க செய்திருந்தனர்.

குறித்த இடத்திற்கு அண்மித்த பகுதியில் முன்பு இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.