கனகராயன்குளத்தில் கனரக வாகனம் தடம்புரண்டு விபத்து: போக்குவரத்து பாதிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் ஏ9 வீதிக்கு குறுக்காக கனரக வாகனம் தடம்புரண்டு இன்று விபத்திற்கு இலக்காகியுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் வீதிப்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பொருட்களை ஏற்றிச்சென்ற கனரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்ட நிலையில் குறித்த வாகனத்தின் சாரதி சிறுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன் போக்குவரத்தை சீர்செய்யும் நடவடிக்கையிலும் ஈடுபட்டிருந்தனர்.