நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்ட மகளிர் தினம்

Report Print Suman Suman in சமூகம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல பகுதிகளிலும் மகளிரை கெளரவிக்கும் நிகழ்வும், மகளிர் தின கொண்டாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று காலை ஏ9 வீதியிலிருந்து கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபம் வரை கவனஈர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கருத்துகளும் பரிமாறப்பட்டுள்ளன.

அம்பாறை

'அவள் தைரியமானவள் நாட்டுக்கு பலமானவள்' எனும் தொனிப்பொருளில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதன் போது மரநடுகை செய்யப்பட்டதுடன் மகளிர் பெருமை கூறும் கலை நிகழ்வுகள் கைப்பணி பொருட்கள் கண்காட்சியும் இடம்பெற்றிருந்தன.

தகவல் - வருணன்

மட்டக்களப்பு

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

சுற்றுச்சூழலை சிறப்பாக பேணி ஆரோக்கிய வாழ்வை உண்டுபண்ணும் பொருட்டு மரநடுகை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இதேவேளை மண்முனைப்பற்று பிரதேச செயலகத்திலும் சர்வதேச மகளிர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தகவல் - ருசாத் மற்றும் நவோஜ்

மலையகம்

மலையகத்திலுள்ள பெண்கள் கலந்து சிறப்பித்த மகளிர் தினம் ஹட்டன் நகரில் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது.

தகவல்- திருமாள்