கனடாவுக்கு அனுப்ப மேற்கொண்ட முயற்சி! தெஹிவளையில் சிக்கிய இளம் யுவதி

Report Print Steephen Steephen in சமூகம்

போலி ஆவணங்களை தயாரித்து பண மோசடி செய்தமை மற்றும் அதற்கு உதவிய சம்பவம் தொடர்பாக இளம் பெண்ணொருவர் தெஹிவளை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்த பெண் பல நபர்களை கனடாவில் உயர்கல்வி பயில அனுப்பி வைப்பதாக கூறி சுமார் 15 லட்சம் ரூபா அளவில் மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பிரதேசத்தில் நிறுவனம் ஒன்றில் பணிப்புரியும் 22 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 30 கடவுச்சீட்டுக்கள், 35 போலி ஆவணங்கள், 2 கணனிகள், 2 அச்சு இயந்திரங்கள், செல்போன், போலி முத்திரை ஆகியவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரான இந்த கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் மூன்று பேர் கைது செய்யப்பட உள்ளனர்.