யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மாட்டுடன் மோதி விபத்து

Report Print Yathu in சமூகம்

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்தை நோக்கிச் செல்லும் புகையிரதமே நேற்று கிளிநொச்சி கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

எனினும் இவ் விபத்தில் எவ்வித உயிர் சேதமோ, பாரியா சேதங்களோ ஏற்படவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விபத்தினால் புகையிரதத்தின் இயந்திரம் முழுமையாக பழுதடைந்ததுடன் சுமார் ஒரு மணி நேரம் வரையில் பரந்தன் புகையிரத நிலையம் நிலையத்தில் புகையிரதம் நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.