கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சர்வதேச மகளிர் தினம்

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வு கிளிநொச்சி பசுமைப் பூங்கா வளாகத்தில் கிளிநொச்சி மாவட்ட மகளீர் அணியின் தலைவியும், கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினருமான கலைவாணி சிறிகாந்நன் தலைமையில் இன்று நடைபெற்றுள்ளது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் கிளிநொச்சி மாவட்ட மகளிர் அணியினரின் வல்ல தேசத்தில் வலிமை மிகு பெண்களாக எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டுள்ளது.

இதில் சட்டத்தரணியும், யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை விரிவுரையாளருமான கோசலை மதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.