சர்வதேச மகளிர் தினத்தினை தேசிய விடுமுறையாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும்

Report Print Kumar in சமூகம்

சர்வதேச மகளிர் தினத்தினை இலங்கையில் தேசிய விடுமுறையாக அறிவிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று சர்வதேச மகளிர் தின நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

கிழக்கில் செயற்படும் கிழக்கு மண்ணை நேசிக்கும் கட்சிகளையும், கிழக்கு மாகாணத்தினை நேசிப்பவர்களையும் இணைத்து தேர்தல் கூட்டணியை எதிர்வரும் சில நாட்களில் அறிவிக்கவுள்ளதாகவும் இதன்போது அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் வி.பு கட்சியின் மகளிர் அணித் தலைவியும், மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினருமான மனோகரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன்,கட்சியின் பிரதி தலைவர் கே.யோகவேள்,கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திருமதி கெனடி பிரான்சிஸ்,ஆலோசகர் ஸ்டாலின்,சுவிஸ் உதயம் அமைப்பின் தலைவர் க.துரைநாயகம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டதுடன், 2000க்கும் மேற்பட்ட பெண்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு, வாவிக்கரை வீதியில் இருந்து மாபெரும் ஊர்வலம் ஒன்று ஆரம்பமாகியுள்ளது.

பெண்கள் சமத்துவத்தினை உறுதிப்படுத்து என்னும் தலைப்பில் இந்த ஊர்வலம் ஆரம்பமாக நகர் ஊடாக சென்று கட்சியின் தலைமையகத்தினை சென்றடைந்ததும் அங்கு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

இதன்போது சமூகத்தில் சிறந்த நிலையில் உள்ள பெண் மற்றும் கிராமிய ரீதியில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும் பெண்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.