தேசிய ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவிக்கு பணப்பரிசில் வழங்கி கௌரவித்த முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன்

Report Print Theesan in சமூகம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேசிய ரீதியில் சாதனை படைத்த முல்லைத்தீவு யுவதிக்கு முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் பணப்பரிசில் வழங்கி கௌரவித்துள்ளார்.

கடந்த மாதம் 27ம் திகதி முதல் இம்மாதம் முதலாம் திகதி வரை வடமத்திய மாகாண விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினுடைய 31ஆவது இளைஞர் விளையாட்டு விழாவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து பங்கு பற்றிய யுவதியான சசிகுமார் சரணியா 1500 மீட்டர் ஓட்டத்தில் தேசிய ரீதியில் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்ததோடு, முல்லைத்தீவு மாவட்டத்துக்கும், வட மாகாணத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அந்த வகையில் இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு வருகை தந்த முன்னாள் அமைச்சரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய றிசாட் பதியுதீன் பணப் பரிசில்களை வழங்கி கௌரவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக காணப்படுகின்ற துணுக்காய் பிரதேசத்தில் யோகபுரம் மகாவித்தியாலய மாணவி சசிகுமார் சரணியா இந்த போட்டியில் தேசிய ரீதியில் மூன்றாமிடம் பெற்று சாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.