மாவை, சரவணபவனின் பங்கேற்புடன் வட்டுக்கோட்டையில் நாளை மகளிர் தின எழுச்சிப் பேரணி!

Report Print Rakesh in சமூகம்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு சரவணபவன் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை மகளிர் அணி நடத்தும் மகளிர் தின எழுச்சிப் பேரணியும், மகளிர் தினமும் நாளை நடைபெறவுள்ளது.

குறித்த நிகழ்வு காலை 9 மணிக்கு சுழிபுரம்,விக்ரோரியா கல்லூரி முன்பாக மகளிர் தின எழுச்சிப் பேரணியுடன்ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் பேரணி சுழிபுரம் பிரதேச சபை மண்டபம் வரையில் நடைபெறும். இதில் யாழ். குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

பேரணியின் முடிவில், சுழிபுரம் பிரதேச சபை மண்டபத்தில் மகளிர் தின நிகழ்வுகள் ஆரம்பமாகும். இந்த நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சோ.சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.