அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கறுப்பு பட்டி அணிந்து போராட்டம்

Report Print Varunan in சமூகம்

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் கறுப்பு பட்டி அணிந்து போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அம்பாறை , தம்பிலுவில் மகா வித்தியாலயத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட நடைபவனி திருக்கோயில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு வந்தடைந்தது.

தேசிய மகளிர் தினத்தை முன்னிட்டு துக்க தினமாக அனுஷ்டித்து கைகளில் பதாதைகளை ஏந்தியவாறு அக்கறைப்பற்று பொத்துவில் பிரதான வீதியூடாக வருகை தந்து திருக்கோயில் மணிக்கூட்டுக்கு முன்பாக கோஷங்களை எழுப்பியவாறு தலையில் கருத்துப்படி அணிந்தவாறு எதிர்ப்புகளை தெரிவித்திந்தமை குறிப்பிடத்தக்கது.