முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் ஆத்மசாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன் தீர்க்கும் நிகழ்வும்!

Report Print Varunan in சமூகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் இன்றைய தினம் ஆத்மசாந்திப் பிரார்த்தனையும், பிதிர் கடன் தீர்க்கும் நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் 11வது நினைவு ஆண்டு ஆரம்பித்திருக்கின்ற நிலையில், இவ்வருடம் குறித்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவிடத்தில் ஆத்மசாந்திப் பிரார்த்தனை இடம்பெற்றுள்ளது.

சாந்தி பிரார்த்தனையைத் தொடர்ந்து பிதிர்க்கடன் தீர்ப்பதற்காக மக்கள் மற்றும் குருமார்கள் அனைவரும் இணைந்து முள்ளிவாய்க்கால் கடற்கரையில் பிதிர் கடன்களை தீர்த்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இடத்தில் அன்னதானமும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.