பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்த யுவதிகளுக்கு நடந்த கொடுமை

Report Print Vethu Vethu in சமூகம்

பொத்துவில் பிரதேச ஹோட்டலில் வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதுடன் மற்றொரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகிய பிரித்தானிய நாட்டை சேர்ந்த 18 வயதுடைய பெண் தற்போதுவரையில் பொத்துவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சிக்கப்பட்டவர், குறித்த பிரித்தானிய பெண்ணின் 19 வயதுடைய நண்பி என தெரியவந்துள்ளது. அவரும் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வந்தவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு சென்று திரும்பி வரும் போது இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 28 வயதுடைய சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


you may like this video