பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வெளிநாட்டவருக்கு கொரோனா வைரஸா? வைத்தியர் வெளியிட்ட தகவல்

Report Print Vethu Vethu in சமூகம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகத்தில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஈரான் நாட்டவர் கொரோனா தொற்றுக்குள்ளாகவில்லை என உறுதியாகியுள்ளது.

கடந்த 5ஆம் திகதி பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஈரான் நாட்டவருக்கு கொரேனா அறிகுறிகள் காணப்பட்டன. எனினும் மேற்கொண்ட மருத்துவ பரிசோதனைகளில் அவர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகவில்லை என உறுதியாகியுள்ளதாக பதுளை வைத்தியர் உப்புல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அவரது இரத்த மாதிரி பொரளையில் உள்ள வைத்திய பரிசோதனை கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எனினும் அவருக்கு சளி, காய்ச்சல் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக உறுதியாகி உள்ளது. இந்தவர் குறித்த ஈரான் நாட்டவர் வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும், குறிப்பிடப்படுகின்றது.

உமாஓய திட்டத்தில் எல்ல பகுதியில் பணியாற்றும் குறித்த ஈரான் நாட்டவர் கடந்த பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி அவர் இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.