மன்னாரில் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மீட்பு

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போயா தினமான இன்று சட்டவிரோத விற்பனைக்காக மன்னாரிலுள்ள வீடு ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை மதுபான போத்தல்களை மன்னார் மது வரி திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

படைத்தரப்பினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மன்னார் - சின்னக்கடை பகுதியில் உள்ள வீட்டிற்குச் சென்ற படையினர் சோதனை நடத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த மதுபான போத்தல்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் குறித்த வீட்டின் உரிமையாளர் தப்பி சென்றுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


you may like this video