விசா இன்றி தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை

Report Print Manju in சமூகம்

மத்திய மாகாணத்தில் விசா இன்றி தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.எல்.ஆர் ரணவீரவின் அறிவுறுத்தலின் கீழ் இந் தநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

மத்திய மாகாணத்தின் பல்வேறு இடங்களிலும் லொட்ஜ்களிலும் விசா இல்லாமல் தங்கியுள்ள வெளிநாட்டவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தங்கியிருக்கும் இந்திய, பாகிஸ்தான், ஈரானிய மற்றும் சவுதி பிரஜைகளை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.


you may like this video