வவுனியாவில் உழைக்கும் பெண்களை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்

Report Print Theesan in சமூகம்

வவுனியாவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வன்னி மக்கள் காப்பகத்தினால் உழைக்கும் பெண்களை ஊக்குவிக்கும் வழிகாட்டல் சிறப்பு கலந்துரையாடல்கள் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வன்னி மாவட்டத்தில் யுத்தம் காரணமாக கணவனை இழந்த பெண் தலைமைக்குடும்பங்கள், வறுமை காரணமாக சுயதொழில் மேற்கொள்ள முடியாமலிருக்கும் பெண்கள், கணவனை இழந்து வறுமையில் வசித்து வரும் பெண்கள் ஆகியோருக்கும் சுயதொழில் திட்டத்தினூடாக உழைக்கும் பெண்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஆரம்ப நிகழ்வு நேற்று கண்டி வீதி பன்றிக்கெய்தகுளம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியிலுள்ள வசதியற்ற பெண்தலைமை குடும்பங்களின் வாழ்வாதரத்தினை உயர்த்தும் நடவடிக்கையாக சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், பெண்தலைமைக்குடும்பங்களுக்கு சுயதொழில்களை வழங்கி அவர்களிடமே அப்பொருட்களைக் கொள்முதல் செய்து சந்தைப்படுத்தும் வாய்ப்பினையும் வழங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு கிராமங்களிலும் சுயதொழில் மேற்கொண்டுவரும் பெண்களை குழுக்களாக அமைத்து அவர்களினூடாக இந்நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுகள் நேற்று புளியங்குளம் புதுக்குளம், கணேசபுரம், நெடுங்கேணி நைனாமடு, ஈஸ்வரிபுரம் ஆகிய பகுதிகளிலுள்ள சுயதொழில் மேற்கொள்ளும் பெண்களுக்கான மகளிர் தின சிறப்புக் கலந்துரையாடல்கள் வழிகாட்டல்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் வன்னி மக்கள் காப்பகத்தில் அங்கம் வகிக்கும் தொழிலதிபர்கள், உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்துகொண்டு கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.