சிறையிலிருந்து வெளியேறுவோர் மீண்டும் குற்றம் புரிகின்றனர்!

Report Print Ajith Ajith in சமூகம்

சிறைச்சாலைகளில் இருந்து வெளியேறுவோர் மீண்டும் குற்றம் புரியும் போக்கு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

குறித்த ஆய்வின்படி ஒருவர் 27 தடவைகள் நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் தண்டனை அனுபவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துரைத்துள்ள புனர்வாழ்வு அத்தியட்சகர் அனீஸ்டீன்,

20 தொடக்கம் 60 வயது வரையிலான சிறைக்கைதிகள் மத்தியில் விடுதலையான பின்னர் மீண்டும் சிறைகளுக்கு செல்லும் போக்கு அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

சிறைகளில் இருந்து வெளியேறியதும் அவர்கள் ஏதாவது சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவது சாதாரணமாகியுள்ளது.

இந்த கைதிகள் வீடுகளை காட்டிலும் சிறைச்சாலைகள் தமது பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவு கிடைப்பதாக உணர்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சிறைச்சாலைகள் திணைக்களம் நாள் ஒன்றுக்கு 3 மில்லியன் ரூபாய்கள் செலவிடுகிறது.

நாட்டில் 4700 கைதிகள் 3 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான சிறைத்தண்டனைக் கைதிகளாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.