ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பகிடிவதை! மாணவர் ஒருவர் படுகாயம்

Report Print Ajith Ajith in சமூகம்

ஸ்ரீஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு மாணவர் ஒருவர் பகிடிவதை சம்பவம் ஒன்றின்போது கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரின் நிலை கவலைக்கிடம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உழவுயந்திரம் ஒன்றின் டயரை சிரேஷ்ட மாணவர்கள் இந்த மாணவர் மீது தள்ளியதாக காயமடைந்துள்ள மாணவரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக தமது சகோதரருக்கு உட்காயங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் இது தொடர்பில் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் மார்ச் 5ம் திகதி இடம்பெற்ற விபத்து ஒன்றிலேயே இந்த மாணவர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.