நீர்கொழும்பில் நடந்த பயங்கரம் - ஹோட்டலுக்குள் புகுந்த கும்பல் அட்டகாசம்- ஒருவர் வெட்டிக்கொலை

Report Print Kanmani in சமூகம்

நீர்கொழும்பு - பெரியமுள்ள பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன்,மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

பெரியமுள்ள பகுதியில் உணவகம் ஒன்றுக்கு வானில் வந்த கும்பலொன்று மேற்கொண்ட தாக்குதலின் போது உணவக ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,இருவர் படுகாயமடைந்த நிலையில் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.