ஒரு வேளை உணவிற்கு கூட மகளோடு தனிமையில் போராடும் தாய்! வாட்டி எடுக்கும் வறுமை

Report Print Kanmani in சமூகம்

வறுமை எந்த அளவுக்கு கொடுமையானது என்பது ஏழைகளாக பிறந்து வளர்ந்து பல இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து உணர்ந்தவர்களுக்கே தெரியும்.

அவ்வாறான குடும்பங்களின் தேவை அறிந்து அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டிய தேவை அரசியல்வாதிகளுக்கு மாத்திரம் அல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் உண்டு

அந்தவகையில்,ஒட்டுசுட்டான் - ஜீவநகர் பகுதியில் பழணியாண்டி ஆண்டிச்சி மற்றும் மகள் தனபாக்கியம் உறவுகள் அனைத்தும் கைவிடப்பட்ட நிலையில் அடுத்த வேளை உணவிற்காக பெரும் துயரத்திற்கு மத்தியில் போராடிக்கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் துன்பங்களுக்கு மத்தியில் வாழும் குடும்பங்களை வெளியுலகத்திற்கு அறியப்படுத்தும் ஒரு முயற்சி ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்டியின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

உறவுகள் அனைத்தும் தன்னை ஏறெடுத்து கூட பார்க்காமல் தனிமையில் கைவிட்டு சென்றுவிட்டனர் என கண்ணீருடன் தனது வாழ்வில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஐ.பி.சி தமிழின் உறவுப்பாலம் நிகழ்ச்சியின் காணொளி ஊடாக இவ்வாறு பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

இவர்களுக்கு உதவி செய்ய விரும்பினால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும் Whatsapp /Viber +94767776363/+94212030600