அனைவரும் சமம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் மகளிர் தின விழா

Report Print Theesan in சமூகம்

அனைவரும் சமம் எனும் தொனிப்பொருளில் வவுனியாவில் மகளிர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வடமாகாண மகளிர் விவகார அமைச்சு, வவுனியா மாவட்டசெயலகம், மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நடாத்திய சர்வதேச மகளிர் தின விழா வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது மகளிர் அமைப்புக்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி விற்பனை கூடம் திறந்து வைக்கப்பட்டதுடன் ஏனைய கலை நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.

இவ் விழாவின் போது மாகாணமட்ட ரீதியில் பெண் தொழில் முயற்சியாளர்களிற்கான பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன், குத்துச்சண்டை போட்டிகளில் பதக்கங்களை பெற்றிருந்த வீராங்கனைகளும் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன், மகளிர் விவகார அதிகாரிகள் மற்றும் பல மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.